/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துணை முதல்வர் சிவகுமார் மீது அமைச்சர் ராஜண்ணா அதிருப்தி
/
துணை முதல்வர் சிவகுமார் மீது அமைச்சர் ராஜண்ணா அதிருப்தி
துணை முதல்வர் சிவகுமார் மீது அமைச்சர் ராஜண்ணா அதிருப்தி
துணை முதல்வர் சிவகுமார் மீது அமைச்சர் ராஜண்ணா அதிருப்தி
ADDED : மார் 02, 2025 06:28 AM

பெங்களூரு: மஹா சிவராத்திரி நாள் அன்று, கோவையில் ஜக்கி வாசுதேவ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்றதால், காங்கிரசில் அதிருப்தி உருவாகி உள்ளது. பலரும் முணுமுணுக்கின்றனர்.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா, ஹாசனில் அளித்த பேட்டி:
கோவையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஏற்பாடு செய்த, சிவராத்திரி நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்றது சரியல்ல. அவரது செயல் எந்த விதத்தில் சரி என்ற கேள்விக்கு, அவரே விளக்கம் அளிக்க வேண்டும்.
இதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் யார் என்பதே, தனக்கு தெரியாது என, சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியிருந்தார்.
அப்படிப்பட்டவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அவருடன் சிவகுமார் ஒரே மேடையில் தோன்றியது சரியல்ல. எங்கள் தலைவரை பற்றி அலட்சியமாக பேசியவரின் நிகழ்ச்சிக்கு சென்றிருக்கக் கூடாது.
லோக்சபாவில் யார், யார் என்னென்ன பேசுகின்றனர் என்பது, ஜக்கி வாசுதேவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அவருக்கு ராகுல் யார் என, தெரியாதா?
இவ்வாறு அவர் கூறினார்.