/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
15,413 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி தகவல்
/
15,413 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி தகவல்
15,413 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி தகவல்
15,413 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி தகவல்
ADDED : மார் 06, 2025 12:33 AM

பெங்களூரு:''கர்நாடகாவில் ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 34,000 கோவில்களின் பெயரில், 15,413 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
கர்நாடகா மேல்சபையில் நேற்று நடந்த விவாதத்தில், காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் ஜப்பார் கேள்விக்கு, பதிலளித்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:
கர்நாடகாவில் ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் 34,000 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமாக, 35,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை பலரும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.
இதுதொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 15,413 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, அந்தந்த கோவில்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மீதமுள்ள 20,000 ஏக்கர் நிலங்கள், படிப்படியாக மீட்கப்பட்டு, கோவில் பெயரில் பதிவு செய்யப்படும். அறநிலைய துறைக்குச் சொந்தமான நிலத்தை அளந்து, சர்வே பணிகளை முடிக்க, தாலுகா அலுவலக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நீதிமன்றங்களில், கோவில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்குகளை கண்காணிக்க, இயக்குனரகத்தின் முதன்மை அதிகாரிகள் கவனித்து கொள்வர். அடுத்தாண்டுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.