/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 சதவீதம் சம்பள உயர்வு வேண்டுமாம் சட்டசபையில் விவாதித்து விரைவில் இறுதி முடிவு
/
எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 சதவீதம் சம்பள உயர்வு வேண்டுமாம் சட்டசபையில் விவாதித்து விரைவில் இறுதி முடிவு
எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 சதவீதம் சம்பள உயர்வு வேண்டுமாம் சட்டசபையில் விவாதித்து விரைவில் இறுதி முடிவு
எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 சதவீதம் சம்பள உயர்வு வேண்டுமாம் சட்டசபையில் விவாதித்து விரைவில் இறுதி முடிவு
ADDED : மார் 05, 2025 07:31 AM
பெங்களூரு: எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 சதவீதம் சம்பளம் உயர்த்துவது குறித்து காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது.
கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு ருசியான, தரமான, உயர் ரக உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. காலை சிற்றுண்டி, மதிய உணவு, டீ, காபி என, வயிறுக்கு குறையில்லாமல் வழங்கப்படுகிறது.
அத்துடன் நீண்ட நேரமாக சட்டசபையில் அமர்ந்திருப்பதால், உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு, கடந்தாண்டு முதல், மசாஜ் நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு சோதனை முறையில் ஒரு மசாஜ் ஷோபா கொண்டு வரப்பட்டது. இம்முறை 21 மசாஜ் ஷோபாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தேவையானபோது, அந்த ஷோபாவில் அமர்ந்து மசாஜ் செய்து கொள்ளலாம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், யார் வேண்டுமானாலும் மசாஜ் செய்து புத்துணர்ச்சி பெறலாம்.
இது மட்டுமா என்று யோசித்து கொண்டிருந்தபோதே, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை உயர்த்தும்படி கடந்தாண்டே சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத் வலியுறுத்தினார். இதற்காக தனி ஆய்வுக்குழு அமைக்கும்படியும் அவர் கோரியிருந்தார்.
சபாநாயகர் காதர் தலைமையில், நேற்று முன்தினம் மாலை, சட்டசபை அலுவல் கூட்டம் நடந்தது. ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த அவகாசம் இருப்பதால், அது குறித்து பரிசீலனை செய்யும்படி இரு கட்சித் தலைவர்களும் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எந்த முடிவும் எடுக்காத சபாநாயகர், சட்டசபையில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறினாராம். சம்பளம் உயர்த்தப்பட்டால், அதற்கு எவ்வளவு நிதி தேவை; அந்த நிதியை எப்படி திரட்டுவது; சம்பளம் உயர்த்தினால் மற்ற திட்டங்களுக்கு ஏதாவது நிதி தட்டுப்பாடு ஏற்படுமா என்பது குறித்து காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் நேற்று கூறுகையில், ''எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.
எவ்வளவு சதவீதம் உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்யவில்லை. சட்டசபையில் விவாதித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.