/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பலாத்காரம் செய்து பெண்ணை கொன்ற நேபாள வாலிபர் கைது
/
பலாத்காரம் செய்து பெண்ணை கொன்ற நேபாள வாலிபர் கைது
ADDED : மார் 05, 2025 11:04 PM

பெங்களூரு: தனியாக நின்றிருந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஹாசனின் ரயில்வே ஜங்ஷன் அருகில், கட்டப்பட்டு வந்த ஒரு ஷெட்டில், பிப்ரவரி 13ம் தேதி அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டிருந்தார்.
உடலை மீட்ட சகலேஸ்புரா ரயில்வே போலீசார், விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, நேபாளத்தைச் சேர்ந்த மவுசம் பஹடி, 25, என்பவரை பெங்களூரில் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியது:
நேபாளை சேர்ந்த இவர், ஹாசன், சகலேஸ்புராவில் நடக்கும் சாலைப் பணிகளில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார். பிப்ரவரி 13ம் தேதி, நேபாளம் செல்வதற்காக பெங்களூருக்கு ரயிலில் சென்றார்.
ஹாசன் ஜங்ஷனில் ரயில் நின்றபோது, ஷெட் அருகில் தனியாக ஒரு பெண் நிற்பதை மவுசம் பஹடி கவனித்துள்ளார். ரயிலில் இருந்து இறங்கி, அப்பெண்ணை ஷெட்டுக்கு இழுத்துச் சென்று, பலாத்காரம் செய்துள்ளார்.
இதை அவர் வெளியே கூறினால், போலீசில் சிக்குவோம் என்ற பயத்தில், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து அப்பெண்ணை கொலை செய்துள்ளார். பின் தலையில் கல்லைப் போட்டு விட்டு விட்டு, அதே ரயிலில் பெங்களூருக்குச் சென்றுள்ளார்.
இதை, விசாரணையில் மவுசம் பஹடி ஒப்புக் கொண்டார்.
கொலையான பெண் யார் என்பது, இன்னும் அடையாளம் தெரியவில்லை.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கொலையாளி மவுசம் பஹடி, சாலைப் பணிகளுக்காக ஹாசனுக்கு வந்திருந்தார். இங்கு அவர் மீது, குற்றப் பின்னணி ஏதும் இல்லை. நேபாளில் இவர் ஏதாவது குற்றம் செய்துள்ளாரா என, தகவல் கேட்டுள்ளோம். கொலையான பெண் யார் என்பது, இன்னும் அடையாளம் தெரியவில்லை.
- சவும்யா லதா,
ரயில்வே எஸ்.பி.,