/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதிய நறுமண சோப்புகள் கே.எஸ்.டி.எல்., அறிமுகம்
/
புதிய நறுமண சோப்புகள் கே.எஸ்.டி.எல்., அறிமுகம்
ADDED : மார் 05, 2025 11:10 PM

பெங்களூரு: கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் கார்ப்பரேஷன், பல்வேறு நறுமணங்களில் குளியல் சோப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன்பு கே.எஸ்.டி.எல்., நிறுவனம் தயாரிக்கும் சந்தன சோப்புகள் மிகவும் பிரபலம். தற்போது புதுப்புது உற்பத்திகளை அறிமுகம் செய்கிறது.
சந்தன எண்ணெய், பாதாம் எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்ட பேபி சோப், பச்சிலை மூலிகைகள், வேப்பிலை, எலுமிச்சை, மஞ்சள் அம்சங்கள் கொண்ட குளியல் சோப்புகளை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இந்த சோப்புகள் மக்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விற்பனையும் அதிகரிக்கிறது. மல்லிகை, ரோஜா, லாவண்டர் என, பல்வேறு நறுமணங்களில் சோப்புகள், மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளன.
மார்க்கெட்டில் வேரூன்றியுள்ளது. குறிப்பாக மல்லிகை நறுமணம் கொண்ட சோப்புகள், அதிகம் விற்பனையாகின்றன.
இதுகுறித்து, கே.எஸ்.டி.எல்., நிர்வாக இயக்குநர் பிரசாந்த் கூறியதாவது:
சோப்புகள் விற்பனை அதிகரித்ததால், தயாரிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆண்டுதோறும் 26,000 டன் சோப்புகள் தயாரிக்கப்பட்டன.
தற்போது 34,000 டன்னாக அதிகரித்துள்ளது. மல்லிகை நறுமணம் கொண்ட சோப்புகளை, மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
ரசாயனம் கலக்காமல், தரமான சந்தன எண்ணெய், பாதாம் எண்ணெய், மல்லிகை வாசம் கொண்ட திரவம் பயன்படுத்தப்படுகிறது. தரத்தை தக்கவைத்துள்ளதால், சோப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
சந்தன எண்ணெய் அதிகம் உள்ள, 'பிரீமியம்' சோப்புகளை மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்ய, கே.எஸ்.டி.எல்., தயாராகி வருகிறது.
மார்க்கெட்டில் குளியல் சோப்பு, பல்வேறு ஷவர் ஜெல், நறுமணம் கொண்ட கிருமி நாசினி, பவுடர்கள், ஊதுவத்தி, விளக்கேற்றும் எண்ணெய், சந்தன எண்ணெய், டியோடரென்ட், தேங்காய் எண்ணெய் உட்பட, 48 பொருட்களை தயாரிக்கிறது. மேலும் 19 புதிய உற்பத்திகளை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய, கே.எஸ்.டி.எல்., தயாராகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.