/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'அடுத்த முறையும் நானே முதல்வர்!'
/
'அடுத்த முறையும் நானே முதல்வர்!'
ADDED : மார் 12, 2025 11:51 PM

பெங்களூரு: “அரசின் ஐந்து ஆண்டுகளும், நானே முதல்வர். அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக நீடிப்பேன்,” என முதல்வர் சித்தராமையா சட்டசபையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் போராட்டத்தால் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் மதியம் சபை கூடியது. அப்போது, முதல்வர் சித்தராமையா வருகை தந்திருந்தார். எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களின் உரிமைகளை பறிக்கும் வேலையை நாங்கள் செய்யவில்லை. அவர்கள் மீது எங்களுக்கும் மதிப்பு உள்ளது. நானும் கூட எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். எங்கள் மீது உங்களுக்கு எவ்வளவு கவுரவம் உள்ளதோ, அதே அளவு கவுரவம், உங்கள் மீது எங்களுக்கு உள்ளது.
பா.ஜ.,வினர் மஹாராஷ்டிராவில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரை அமைச்சர்களின் தனி உதவியாளர்களாக நியமித்துள்ளனர். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, பசவராஜ் சேடம் என்பவரை தனிப்பட்ட உதவியாளராக நியமித்திருந்தார்.
எந்த காரணத்தை முன்னிட்டும், வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் கமிட்டி தலைவர், துணைத்தலைவர்களை மாற்ற முடியாது. ஆனால் எந்த எம்.எல்.ஏ.,க்களையும், நாங்கள் அவமதிக்கவில்லை. நீங்கள் ஒப்புக் கொண்டாலும், இல்லை என்றாலும் அது உங்கள் விருப்பம்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக்: முதல்வர் பதவியில் நீங்கள் இன்னும் எத்தனை நாட்கள் இருப்பீர்களோ தெரியவில்லை.
முதல்வர் சித்தராமையா: இம்முறை அரசின் ஆட்சிக் காலம் வரை, நானே முதல்வராக நீடிப்பேன். அதற்கு அடுத்த ஐந்தாண்டுகளும் கூட, நானே முதல்வராக இருப்பேன்.