/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வர்த்தக சான்றிதழ் விதிமீறல் ஓலா ஷோரூம்களில் சோதனை
/
வர்த்தக சான்றிதழ் விதிமீறல் ஓலா ஷோரூம்களில் சோதனை
ADDED : மார் 09, 2025 12:19 AM
பெங்களூரு: ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் ஷோரூம்கள் விதிகளை பின்பற்றாமல் இயங்குவதாக வந்த புகாரை அடுத்து போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த மின்சார ஸ்கூட்டர் நிறுவனமான ஓலாவுக்கு நாடு முழுதும் 4,000 ஷோரூம்கள் உள்ளன.
மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, பைக் மற்றும் கார் ஷோரூம்களில் பதிவு செய்யப்படாத வாகனங்களை காட்சிப்படுத்த, விற்க, டெஸ்ட் டிரைவ் எனப்படும் சோதனை ஓட்டத்திற்கு எடுத்துச் செல்ல வர்த்தகச் சான்றிதழ்கள் தேவை.
ஆனால் 95 சதவீத ஓலா ஷோரூம்கள் தேவையான அடிப்படை சான்று இல்லாமல் இயங்குவதாக வாடிக்கையாளர்கள் புகார் தந்துள்ளனர். இதையடுத்து நாடு முழுதும் உள்ள ஓலா ஷோரூம்களில் நேற்று போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் பல ஷோரூம்கள் மூடப்பட்டன; வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஓலா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.