/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மடாதிபதி மீதான பலாத்கார வழக்கு ரத்து
/
மடாதிபதி மீதான பலாத்கார வழக்கு ரத்து
ADDED : மார் 07, 2025 11:13 PM

பெங்களூரு: ஹொசநகரின் ராமசந்திரபுரா மடத்தின்ராகவேஸ்வர பாரதிசுவாமிகள் மீதான பாலியல் பலாத்கார வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஷிவமொக்கா, ஹொசநகரின் ராமசந்திரபுரா மடத்தின் மடாதிபதி ராகவேஸ்வரபாரதி சுவாமிகள்.
இவர் மீது 2015ல் பெண்ணொருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார்.
'மடத்தில், பக்தி பாடல்கள் பாட வந்த தன்னை, மடாதிபதிபல ஆண்டுகளாகபாலியல் பலாத்காரம்செய்தார்' என, குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக, மாநில அரசு சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையை முடித்தஅதிகாரிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடந்த போது, மடாதிபதி தரப்பில்ஆஜரான வக்கீல்,'தீய நோக்கத்துடன் பாடகி புகார் அளித்துள்ளார்' என, வாதிட்டார்.
வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி நாகபிரசன்னா, மடாதிபதி ராகவேஸ்வர பாரதி சுவாமிகள் மீதான வழக்கை ரத்துசெய்து, நேற்றுஉத்தரவிட்டார்.