/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.42,018 கோடி
/
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.42,018 கோடி
ADDED : மார் 08, 2025 02:12 AM

பெங்களூரு: எஸ்.சி., சமுதாயத்தினருக்கு 29,922 கோடி ரூபாய்; எஸ்.டி., சமுதாயத்தினருக்கு 12,026 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என மொத்தம் 42,018 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
அரசு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவை சேர்ந்த குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு, 2 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்
பிரகதி காலனி திட்டத்தின் கீழ் எஸ்.சி., பிரிவினருக்கு குடியிருப்புகள் கட்டும் பணிக்கு 222 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினர் மீது நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க புதிதாக 33 சிறப்பு போலீஸ் நிலையங்கள்
எஸ்.சி., - எஸ்.டி., - பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக, மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி பி.யு., கல்லுாரியாக மாற்றப்படும்
பேரூராட்சிகளில், புதிதாக எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்காக 26 பள்ளிகள் கட்டப்படும்
கே.ஆர்.ஐ.இ.எஸ்., சார்பில் 61 உறைவிட பள்ளிகளுக்காக 1,292 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
தற்போதைய கே.ஆர்.ஐ.இ.எஸ்., உறைவிட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு 213 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
வாடகை கட்டடத்தில் உள்ள சமூக நலத்துறையின் 34 விடுதிகள், 213 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடத்திற்கு மாற்றம்
லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேரும் இரண்டு மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கல்
வேலையில்லாத எஸ்.சி., இளைஞர்களுக்கு நடமாடும் வண்டி கடை வைப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்
பெங்களூரு ஆதரவற்றோர் நிவாரண மையத்தில் புதிதாக மன நல மையம்
விடுதிகளில் உணவு வழங்கும் முறை கண்காணிக்கப்படும்
தாவணகெரே, பஞ்சாரா சமுதாயத்தவருக்கு புனித சேவாலால் கோவிலில் உறைவிடப்பள்ளி துவங்கப்படும்
புகழ் பெற்ற 100 தேசிய கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் எஸ்.சி., மாணவர்களுக்கு உதவித்தொகை
கர்நாடகா எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான துணை ஒதுக்கீடு சட்டம் 2013ன் படி, மானியம் சரியாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும்
எஸ்.சி., - எஸ்.டி., - பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் தொடர்பான பிரச்னைகள் குறித்த சிறப்பு விவாதங்கள், சட்டசபையில் நடக்கும்
தனியார், அரசு கல்லுாரிகளின் விடுதிகளில் தங்கி மருத்துவம், பொறியியல் படிப்போருக்கு மாதம் 3,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
பால் பண்ணை தொழில் நடத்துவதற்கு இரண்டு பசு அல்லது எருமைகள் வாங்க எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 50 சதவீதம் மானியம் அல்லது 1.25 லட்சம் ரூபாய் வழங்கல்
எஸ்.சி., - எஸ்.டி., மகளிர் சுய உதவி குழுக்களில் வழங்கப்படும் கடன் மற்றும் உதவித்தொகை 2.50 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு.