/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின்சார வாகன உற்பத்திக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு
/
மின்சார வாகன உற்பத்திக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு
மின்சார வாகன உற்பத்திக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு
மின்சார வாகன உற்பத்திக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு
ADDED : பிப் 15, 2025 02:48 AM

பெங்களூரு: ''மின்சார வாகன உற்பத்திக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்,'' என்று, மின்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு உலக முதலீட்டாளர் மாநாட்டில், மின்துறை அமைச்சர் ஜார்ஜ் நேற்று பேசியதாவது:
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கொள்கை இங்கு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் வாகன உற்பத்தி துறைக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
கவுரிபிதனுார், தார்வாட், ஹரோஹள்ளியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி அலகுகள் அமைக்கப்படும். நாட்டின் மின்சார வாகன துறையில், கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. பேட்டரி, செல் உற்பத்தி, சார்ஜிங், சோதனை, உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஏற்கனவே 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரில் பி.எம்.டி.சி.,யில் குறிப்பிட்ட துாரத்திற்கு மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும் நாட்களில் மின்சார பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றம் செய்யும் நடைமுறைகளை ஊக்குவிக்கிறோம். மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை வாகனத்தை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

