தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேம்பாலம் கட்டும் பணிக்காக வீடுகளை இழந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., ரூபகலா உதவி

 மேம்பாலம் கட்டும் பணிக்காக வீடுகளை இழந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., ரூபகலா உதவி

 மேம்பாலம் கட்டும் பணிக்காக வீடுகளை இழந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., ரூபகலா உதவி


ADDED : செப் 26, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: உரிகம் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக இடிக்கப்பட்ட வீடுகளின் குடும்பத்தினருக்கு, ஆஷ்ரியா திட்டத்தில் வீட்டு மனைகள் தருவதாக, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா உறுதி அளித்தார்.

உரிகம் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, தங்கச் சுரங்க தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வந்த, 20 வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் அகற்றப்பட்டன. இந்த இடத்தை நேற்று எம்.எல்.ஏ., ரூபகலா பார்வையிட்டார்.

அவர் கூறியதாவது:

சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்றதால் வீடுகள், கடைகள் அகற்றப்பட்டபோது என்னால் நேரில் வர இயலாத நிலை ஏற்பட்டது. உரிகம் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பது அவசியமாகி உள்ளது. இந்தத் திட்டம் நகரின் வளர்ச்சிக்கு உதவும்.

இந்தத் திட்டத்திற்காக வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுப்பது அவசியம். வீடுகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆஷ்ரியா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகராட்சி மூலம் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us