தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அத்துமீறல்! : மின்வாரிய இன்ஜினியர் மீது காங்., - எம்.எல்.சி., தாக்குதல் :ஆதரவாளரின் குவாரி மின் இணைப்பை துண்டித்ததால் ஆத்திரம்

 அத்துமீறல்! : மின்வாரிய இன்ஜினியர் மீது காங்., - எம்.எல்.சி., தாக்குதல் :ஆதரவாளரின் குவாரி மின் இணைப்பை துண்டித்ததால் ஆத்திரம்

 அத்துமீறல்! : மின்வாரிய இன்ஜினியர் மீது காங்., - எம்.எல்.சி., தாக்குதல் :ஆதரவாளரின் குவாரி மின் இணைப்பை துண்டித்ததால் ஆத்திரம்


ADDED : செப் 26, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமி ஹெப்பால்கர், முன்னாள் அமைச்சர். இவரது தம்பி சன்னராஜ் ஹட்டிஹோளி, 42. காங்கிரஸ் எம்.எல்.சி.,யாக உள்ளார். இவரது ஆதரவாளர் பிரமோத் ஜாதவ். பெலகாவி தாலுகா தரிஹால் கிராமத்தில் கல்குவாரி நடத்துகிறார்.

இந்த கல்குவாரியில் கல் உடைக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லை.

கட்டணம் செலுத்தும்படி ஹெஸ்காமில் இருந்து, பிரமோத் ஜாதவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை.

ரூ.77 ஆயிரம் பாக்கி இந்நிலையில், நேற்று முன்தினம் கல்குவாரியின் மின் இணைப்பை ஹெஸ்காம் அதிகாரிகள் துண்டித்தனர். இதுபற்றி சன்னராஜ் ஹட்டிஹோளியின் கவனத்திற்கு, பிரமோத் ஜாதவ் கொண்டு சென்றார்.

இதையடுத்து, லட்சுமி ஹெப்பால்கரின் தனிப்பட்ட உதவியாளர் சோமு என்பவரிடம் இருந்து, ஹெஸ்காம் இன்ஜினியர் தீபக்கிற்கு மொபைல் போனில் அழைப்பு சென்றுள்ளது. சன்னராஜ் ஹட்டிஹோளியை சந்திக்கும்படி கூறியுள்ளார்.

அதன்படி, நேற்று காலை பெலகாவியின் குவெம்புநகரில் உள்ள வீட்டில், சன்னராஜ் ஹட்டிஹோளியை, தீபக்கும், இன்னொரு அதிகாரி ராஜுவும் சந்தித்துள்ளனர்.

அப்போது, 'எனது ஆதரவாளர் கல்குவாரியின் மின்இணைப்பை துண்டிக்க, உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது' என, சன்னராஜ் ஹட்டிஹோளி கோபத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மூன்று மாதமாக 77,360 ரூபாய் பாக்கி வைத்திருந்ததால் இணைப்பை துண்டித்ததாக, தீபக்கும், ராஜுவும் கூறியுள்ளனர்.

ஊழியர்கள் போராட்டம் பேசி கொண்டிருக்கும் போதே, தீபக்கின் சட்டையை பிடித்த சன்னராஜ், அவரை நெஞ்சில் குத்தி தாக்கி உள்ளார். தடுக்க முயன்ற ராஜுவையும் தாக்கியுள்ளார். பின், இருவரையும் மிரட்டி வெளியே அனுப்பியுள்ளார்.

எம்.எல்.சி., வீட்டிற்குள் நடந்தது பற்றி, ஹெஸ்காமில் பணியாற்றும் சக அதிகாரிகள், ஊழியர்களிடம் தீபக், ராஜு கூறினர். ஏ.பி.எம்.சி., போலீஸ் நிலையம் சென்ற, ஹெஸ் காம் ஊழியர்கள், சன்னராஜ் மீது புகார் செய்தனர். புகாரை பெற்று கொள்வதில், போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர்.

கோபம் அடைந்த ஹெஸ்காம் ஊழியர்கள், போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். சன்னராஜ் மீது உடனே வழக்குப்பதிவு செய்ய, கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்ததும் டி.சி.பி., நாராயண பரமணி அங்கு விரைந்து சென்றார். ஹெஸ்காம் ஊழியர்களிடம் பேச்சு நடத்தி அனுப்பினர். சன்னராஜ் தங்களை தாக்குவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என, தீபக்கும், ராஜுவும் கூறியுள்ளனர்.

ஆனால், இருவரையும் நான் தாக்கவே இல்லை என, சன்னராஜ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று, எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளன. சன்னராஜ், முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us