அரசு பள்ளிகளை மேம்படுத்துங்கள் அரசுக்கு 'சிவிக் பெங்களூரு' வலியுறுத்தல்
அரசு பள்ளிகளை மேம்படுத்துங்கள் அரசுக்கு 'சிவிக் பெங்களூரு' வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2026 03:34 AM

பெங்களூரு: 'அரசு பள்ளிகளை மேம்படுத்துங்கள்' என, கர்நாடக அரசுக்கு, சிவிக் பெங்களூரு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சமூகத்திற்காக பாடுபடும் சிவிக் பெங்களூரு, கல்வி உரிமைக்கான பிரசார குழு இணைந்து, பெங்களூரில் தனியார் ஹோட்டலில், கர்நாடகாவில் பள்ளி கல்வியின் நிலை என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடத்தியது. பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் பேசியதாவது:
கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளில் தற்போதைய உ ள்கட்டமைப்பு மோசமாக உள்ளது. இதனால் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைகிறது. தற்போதைய சூழலில் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான கல்வி கிடை க்க வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்புகளில் சமத்துவமின்மை இருக்கும் வரை, இடஒதுக்கீடு தொடர வேண்டும். ஆசிரியர்களை கல்விசாரா பணியில் ஈடுபடுத்துவதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவிக் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் காத்தியாயினி சாமராஜ் பேசுகையில், அரசு பள்ளிகளை மேம்படுத்துங்கள். மாநிலத்தில் முறையான கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்படாது. நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டது பற்றி எடுத்து கூறினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற அமைப்பினர், குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
