தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமலாக்கத்துறை சோதனை  ரூ.7.52 லட்சம் சிக்கியது

 அமலாக்கத்துறை சோதனை  ரூ.7.52 லட்சம் சிக்கியது

 அமலாக்கத்துறை சோதனை  ரூ.7.52 லட்சம் சிக்கியது


ADDED : செப் 26, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அட்டிகா கோல்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 7.52 லட்சம் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டவிரோத பணபரிமாற்ற விவகாரத்தில், அட் டிகா கோல்டு நிறுவனத்தின் அலுவலகங்கள், அதன் உரிமையாளரின் வீடுகள் என பெங்களூரு, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய, 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 23, 24 தேதிகளில் சோதனை நடத்தினர்.

இது குறித்து, அமலாகத்துறை வெளியிட்ட அறிக்கை:

திருடப்பட்ட தங்கத்தை வாங்கி, சட்ட விரோதமாக பணம், சொத்துகளை சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் நடந்த சோதனையில், 7.52 லட்சம் ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு நாணயங்கள், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் இயக்குனர் அயூப் தேடப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us