/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் முன்கூட்டியே கோடை விடுமுறை?
/
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் முன்கூட்டியே கோடை விடுமுறை?
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் முன்கூட்டியே கோடை விடுமுறை?
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் முன்கூட்டியே கோடை விடுமுறை?
ADDED : மார் 07, 2025 11:13 PM
பெங்களூரு: கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாணவர்களின் நலன் கருதி, தேர்வுகளை விரைவில் முடித்து நிர்ணயித்த நாட்களுக்கு முன்பே, கோடை விடுமுறை அறிவிக்க அரசு ஆலோசிக்கிறது.
இம்முறை கோடை காலத்துக்கு முன்பே, வெப்பம் அதிகரிக்க துவங்கி உள்ளது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதன் விளைவாக மக்கள் வீட்டில் இருந்து, வெளியே வரவே அஞ்சுகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில், வெப்ப காற்று வீசுகிறது. மாணவர்கள் பள்ளி சென்று திரும்புவதற்குள், சோர்ந்து போகின்றனர்.
பெற்றோரும், தங்கள் பிள்ளைகளுக்கு எப்போது தேர்வு முடிந்து, விடுமுறை கிடைக்கும் என, காத்திருக்கின்றனர். பொதுவாக ஏப்ரலில் கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இம்முறை வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், விரைவில் தேர்வுகளை முடித்து, நிர்ணயித்த நாட்களுக்கு முன்பே விடுமுறை அளிக்க அரசு ஆலோசிக்கிறது. மார்ச்சிலேயே தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், 2025ல் கோடை காலத்துக்கு முன்பே, வெயில் வாட்டுகிறது. இச்சூழ்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவில் தேர்வுகளை முடித்து, கோடை விடுமுறையை அறிவிக்கும்படி பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
வெப்பத்தில் இருந்து மக்கள், தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை தேவையின்றி, வெளியே செல்லாதீர்கள். கால்நடைகளை வெயிலில் நிறுத்தாதீர்கள். நிறைய தண்ணீர் புகட்டுங்கள்; தாகம் இல்லை என்றாலும், தண்ணீர் குடியுங்கள். இரவில் ஜன்னல்களை திறந்து வையுங்கள். அவ்வப்போது குளிர்ந்த நீரில் குளியுங்கள். விவசாயிகள் வெளியே செல்லும் போது, குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.