/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
0 - 3 சதவீத வட்டியுடன் நெசவாளர்களுக்கு கடன் ஜவுளி துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தகவல்
/
0 - 3 சதவீத வட்டியுடன் நெசவாளர்களுக்கு கடன் ஜவுளி துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தகவல்
0 - 3 சதவீத வட்டியுடன் நெசவாளர்களுக்கு கடன் ஜவுளி துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தகவல்
0 - 3 சதவீத வட்டியுடன் நெசவாளர்களுக்கு கடன் ஜவுளி துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தகவல்
ADDED : மார் 14, 2025 06:59 AM

பெங்களூரு: சட்டசபையில் நேற்று பா.ஜ., உறுப்பினர் சித்து சவதி கேள்விக்கு, பதிலளித்து ஜவுளி துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் கூறியதாவது:
நெசவாளர்கள் நலன் கருதி, மாநில அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளன. விடுதிகள், சுகாதார மையங்களுக்கு படுக்கை விரிப்பு வேண்டும் என்று சமூக நலத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கல்வி ஆண்டில், 21.15 லட்சம் மீட்டர் மாணவர்களுக்கான சீருடை வேண்டும் என கல்வித் துறை கேட்டுள்ளது. இவை, கர்நாடக கைத்தறி மேம்பாட்டு வாரியத்தில் பதிவு செய்த, 3,567 நெசவாளர்கள் மூலம் தயாரிக்கப்படும்.
ரபகவி, பனஹட்டி, தெர்தல், சம்மாடா, கெங்கேரிமாடி, மஹாலிங்கபுரா, ஹொசூர், நவலகி ஆகிய இடங்களில் கர்நாடக கைத்தறி மேம்பாட்டு வாரியத்தின் துணை மையங்கள் உள்ளன.
மாணவர்களுக்கான சீருடை தயாரிக்க, நெசவாளர்களுக்கு தேவையான நுால்கள், இந்த மையங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
நெசவாளர்கள் நெய்யும் துணிக்கு, உரிய கட்டணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மானியம்
இதுவரை 752 நெசவாளர்களுக்கு, 21 கூட்டுறவு சொசைட்டிகள், கூட்டுறவு வங்கிககள் மூலம், 2024 - 25ம் ஆண்டுக்கான 59.31 லட்சம் ரூபாய், வட்டியுடன் கடன் வழங்கப்பட்டுள்ளது.
நெசவாளர் சம்மான் திட்டத்தின் கீழ், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுதோறும், 5,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
கைத்தறி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கைத்தறிக்கு தேவையான உபகரணங்கள் வாங்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து நெசவு தொழிலுக்காக, பூஜ்யம் முதல் ஒரு சதவீத வட்டியில் 2 லட்சம் ரூபாய் வரையும்; மூன்று சதவீத வட்டியில் 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படும்.
கைத்தறி பொருட்களை விற்பனை செய்ய, மாநில, தேசிய அளவில் கைத்தறி கண்காட்சி நடத்தப்படும்.
இலகல் சேலைகள், குலேதகுட்டா கானா, மொலகால்மூரு பட்டு சேலைகள், உடுப்பி பருத்தி சேலைகளுக்கு 'ஜி.ஐ.,' என புவியியல் குறியீடு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.