/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தெருநாய்களுக்கு தடுப்பூசி தொற்றுநோய் தடுப்பில் தீவிரம்
/
தெருநாய்களுக்கு தடுப்பூசி தொற்றுநோய் தடுப்பில் தீவிரம்
தெருநாய்களுக்கு தடுப்பூசி தொற்றுநோய் தடுப்பில் தீவிரம்
தெருநாய்களுக்கு தடுப்பூசி தொற்றுநோய் தடுப்பில் தீவிரம்
ADDED : பிப் 14, 2025 11:03 PM
பெங்களூரு: பெங்களூரில் 1.84 லட்சம் தெருநாய்களுக்கு, தொற்றுநோய் தடுப்பூசி போட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கை நாட்டிலேயே முதல் முறையாகும்.
பெங்களூரில் தெரு நாய்களுக்கு தொற்று நோய் தடுப்பூசி போடும் பணியை, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், நேற்று துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
பெங்களூரில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம், நாட்டிலேயே முதன் முறையாகும். நகரில் 1.84 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட, இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக, 4.98 கோடி ரூபாய் செலவிடப்படும்.
பெங்களூரு கால்நடை பிரிவு சார்பில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த திட்டங்களை மாநகராட்சி நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது.
ரேபிசை தவிர, தெரு நாய்களிடம் இருந்து பலவிதமான நோய்கள், மனிதர்களுக்கு பரவுகிறது. ஐந்து விதமான நோய்களுக்கு தடுப்பூசி மிகவும் அவசியம். மக்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவது உள்ளாட்சிகளின் கடமையாகும்.
அதுபோன்று, தெரு நாய்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதும், உள்ளாட்சிகளின் கடமைதான். எனவே நோய்களை தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்கவும், இத்திட்டம் உதவியாக இருக்கும்.
பெங்களூரில் 2023ம் ஆண்டில் நடத்தப்பட்ட தெரு நாய்கள் ஆய்வில், 2.79 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரிந்தது. இதில் 50 சதவீதம் நாய்களுக்கு, நடப்பாண்டு தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.