/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீரசைவ லிங்காயத்து கூட்டம் விருப்பமில்லாத விஜயேந்திரா
/
வீரசைவ லிங்காயத்து கூட்டம் விருப்பமில்லாத விஜயேந்திரா
வீரசைவ லிங்காயத்து கூட்டம் விருப்பமில்லாத விஜயேந்திரா
வீரசைவ லிங்காயத்து கூட்டம் விருப்பமில்லாத விஜயேந்திரா
ADDED : மார் 02, 2025 06:32 AM

பெங்களூரு: 'எடியூரப்பா மீதும், என் மீதும் உள்ள அன்பினால், சிலர் வீரசைவ லிங்காயத் சமூக கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
தன் 'எக்ஸ்' பக்கத்தில் விஜயேந்திரா குறிப்பிட்டுள்ளதாவது:
பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி, 'அனைவருக்கும் சமத்துவம்' என்ற குறிக்கோளுடன் மாநிலத்தில் ஆட்சி செய்தவர் எடியூரப்பா. அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு முன்னேறி வரும் நிலையில் வீரசைவ லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமையாக உள்ளது.
இதுதொடர்பாக, சமூகத்தின் விருப்பத்துக்கு ஏற்ப, கர்நாடகாவை மேம்படுத்தவும், 'வளர்ந்த இந்தியா' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை அடைய பாடுபடும், பா.ஜ.,வின் சித்தாந்தத்தை ஆதரிக்கும் ஒரு விசுவாசமான தொண்டனாக நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
சமீபத்திய அரசியல் மாற்றங்களை தொடர்ந்து என் மீதும், எடியூரப்பா மீதும் உள்ள அபிமானத்தின் காரணமாக, சில நலம் விரும்பிகள், வீரசைவ லிங்காயத் சமூக கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இத்தகைய கூட்டத்தை யாரும் நடத்த வேண்டாம்.
இக்கூட்டம் நடப்பதால் கட்சிக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும். எனவே, ஆதரவாளர்கள், தொண்டர்கள், இவ்விஷயத்தை கைவிட்டு, கட்சிப் பணியில் ஈடுபடுங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.