/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழாய்களில் கட்டுப்பாட்டு கருவி பொருத்த குடிநீர் வாரியம் உத்தரவு
/
குழாய்களில் கட்டுப்பாட்டு கருவி பொருத்த குடிநீர் வாரியம் உத்தரவு
குழாய்களில் கட்டுப்பாட்டு கருவி பொருத்த குடிநீர் வாரியம் உத்தரவு
குழாய்களில் கட்டுப்பாட்டு கருவி பொருத்த குடிநீர் வாரியம் உத்தரவு
ADDED : மார் 12, 2025 11:12 PM
பெங்களூரு: பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில், நீர் வீணாகும் இடங்களில், குழாய்களில் ஏரேட்டர் எனும் தண்ணீர் அதிகம் பாய்வதை கட்டுப்படுத்தும் கருவியை பொருத்தும்படி, குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
நீரை மிச்சப்படுத்துவதும், நல்ல முறையில் பயன்படுத்துவதும் மாநகராட்சியின் குறிக்கோள். நீர் வீணாவதை தடுக்கும் வகையில், குழாய்களுக்கு ஏரேட்டர் பொருத்துவது கட்டாயம். இந்த கருவியை பொருத்துவதால், 60 முதல் 85 சதவீதம் நீரை மிச்சப்படுத்தலாம். நீரை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளில், ஏரேட்டர் பொருத்துவதும் ஒன்றாகும்.
வர்த்தக கட்டடங்கள், ஹோட்டல்கள், குடியிருப்புகள் உட்பட, பல்வேறு பகுதிகளில் குழாய்களுக்கு கட்டாயமாக ஏரேட்டர் பொருத்த வேண்டுமென, கடந்தாண்டே உத்தரவிடப்பட்டது.
ஏரேட்டர் பொருத்த, போதுமான அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான கட்டடங்களில், ஏரேட்டர் பொருத்தவில்லை என்பது, ஆய்வில் தெரிந்தது. குடிநீர் வாரியத்தின் முடிவுக்கு, பொது மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
பெங்களூரு முழுதும் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏரேட்டர்கள் பொருத்தப்பட்டன. இதனால் பெருமளவில் தண்ணீர் வீணாவது தவிர்க்கப்பட்டது. 2024ல் நகரில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, இம்முறை கோடைகாலம் துவங்கியவுடன், குடிநீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவையான இடங்களில் குழாய்களில் ஏரேட்டர் பொருத்தப்படும். விரைவில் இந்த சாதனத்தை பொருத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏரேட்டர் பொருத்தாத மால்கள், வர்த்தக கட்டடங்கள், அபார்ட்மென்ட்கள், தனியார் கட்டடங்கள், சொகுசு ஹோட்டல்களுக்கு விரைவில் அபராதம் விதிக்கப்படும். வீடுகளிலும் மக்கள் தாங்களாக முன் வந்து, இந்த சாதனத்தை பொருத்திக் கொண்டு, தண்ணீர் வீணாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.