/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.10,000 'வாங்கிய' பெண் இன்ஸ்., கைது
/
ரூ.10,000 'வாங்கிய' பெண் இன்ஸ்., கைது
ADDED : பிப் 22, 2025 05:15 AM
பெங்களூரு: பெங்களூரு தேவரபீசனஹள்ளியைச் சேர்ந்தவர் லோகேஷ், 30. இவர், கர்நாடக அரசின் வீட்டுவசதி துறைக்கு உட்பட்ட குடிசை மாற்று வாரியத்திடம் இருந்து வீடு வாங்க நினைத்தார். இதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில், போலி சாதி சான்றிதழை சமர்பித்து, வீடு வாங்க முயற்சிப்பதாக கூறி, சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தில் லோகேஷ் மீது ஒருவர் புகார் செய்தார்.
இதையடுத்து, லோகேஷ் தாக்கல் செய்த ஆவணங்களை, சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரக பெண் இன்ஸ்பெக்டர் கீதா என்பவர் சரிபார்த்தார். ஆவணத்திற்கு ஒப்புதல் அளிக்க 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முதலில் லோகேஷ் ஒப்பு கொண்டார். பின், லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார்.
நேற்று மாலை கீதாவை சந்தித்த லோகேஷ், போன் பே மூலம் 10,000 ரூபாய் அனுப்பினார். அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார் கையும், களவுமாக கீதாவை கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது.

