பான் பெருமாள் கோவிலில் இன்று முதல் 10 நாட்கள் சித்திரை திருவாதிரை உற்சவம்
பான் பெருமாள் கோவிலில் இன்று முதல் 10 நாட்கள் சித்திரை திருவாதிரை உற்சவம்
ADDED : ஏப் 13, 2026 01:17 AM
ஹலசூரு: ஹலசூரு பான் பெருமாள் கோவிலில், இன்று முதல் பத்து நாட்களுக்கு சித்திரை திருவாதிரை உற்சவம் நடக்கிறது.
பெங்களூரு ஹலசூரு பஜார் தெருவில் பிரசித்தி பெற்ற பான் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று முதல், 22 ம் தேதி வரை 10 நாட்கள் தினமும் மாலை, 6:00 முதல் இரவு 7:30 மணி வரை, ஸ்ரீ ராமானுஜர் சித்திரை திருவாதிரை உற்சவம் நடைபெற உள்ளது.
உற்சவத்தின் போது திவ்ய பிரபந்த சேவா களம், சாதுமுறையும் நடக்கிறது. மஹா மங்களாரத்தி முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்படும். வரும், 22ம் தேதி சித்திரை திருவாதிரை அன்று இரவு 8:30 முதல் 10:30 மணி வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
முன்னதாக மாலை, 5:00 முதல் இரவு 7:30 மணி வரை திவ்ய பிரபந்த சேவா களம், சாதுமுறை நடக்கிறது. பின், மஹா மங்களராத்தியை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று, கோவில் பிரதான அர்ச்சகர் ஒய்.விஷ்ணு சுதன் பட்டர் அழைப்பு விடுத்து உள்ளார்.
தொடர்புக்கு: 94811 84833, 94492 55373
