தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வாஷிங் மிஷினில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம்

வாஷிங் மிஷினில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம்

வாஷிங் மிஷினில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம்


UPDATED : நவ 10, 2026 06:10 AM

ADDED : நவ 09, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 06:10 AM ADDED : நவ 09, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடகு: மடிகேரியில் வீட்டில் உள்ள வாஷிங்மிஷினில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள ராஜநாகம் பிடிக்கப்பட்டது.

குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் தொட்டபுலிக்கோட்டு கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். நேற்று காலை துணிகளை துவைக்க அவரின் மனைவி, வாஷிங் மிஷினை திறந்தார். அப்போது 10 அடி நீளமுள்ள ராஜநாகம் பதுங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ராஜநாகம் இருப்பதை பார்த்த அவர்கள், பாம்பு பிடி நிபுணர் யதுகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அரை மணி நேரத்தில் அங்கு வந்த அவர், இயந்திரத்திற்குள் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். பிடித்த பாம்பை, வனப்பகுதியில் விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us