தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஏ.ஐ.,யால் பெண் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்கும் சவால்கள் பற்றி விவாதிக்க 2 நாள் மாநாடு

ஏ.ஐ.,யால் பெண் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்கும் சவால்கள் பற்றி விவாதிக்க 2 நாள் மாநாடு

ஏ.ஐ.,யால் பெண் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்கும் சவால்கள் பற்றி விவாதிக்க 2 நாள் மாநாடு


UPDATED : நவ 10, 2026 06:08 AM

ADDED : நவ 09, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 06:08 AM ADDED : நவ 09, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஏ.ஐ., எனும் செயற்கை தொழில்நுட்பத்தால், பெண் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்கும் சவால்கள் பற்றி விவாதிக்க, பெங்களூரில் வரும் 17, 18ம் தேதிகளில் மாநாடு நடக்க உள்ளது.

கர்நாடக சட்டசபை சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல், மேல்சபை தலைவர் சலீம் அகமது கூட்டாக நேற்று அளித்த பேட்டி:

நம் நாட்டின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த, பெண் மக்கள் பிரதிநிதிகளை ஒரே மேடையில் இணைக்கும் நிகழ்வாக, காமன்வெல்த் மகளிர் பார்லிமென்ட் உறுப்பினர்கள் மாநாட்டை, வரும் 17, 18ம் தேதிகளில் பெங்களூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக இந்த மாநாடு நடக்க உள்ளது சிறப்பு வாய்ந்தது.

எம்.பி.,க்கள், சபாநாயகர்கள், துணை சபாநாய கர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என 150க்கும் மேற்பட்ட பெண் மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இம்மாநாட்டை 17ம் தேதி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, முதல்வர் சிவகுமார் துவக்கி வைப்பர். காமன்வெல்த் மகளிர் பார்லிமென்ட் உறுப்பினர்கள் இந்திய மண்டல பிரிவு தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். 'பாதுகாப்பான அடித்தளங்கள், வலிமையான குரல்கள்: இணைய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு பாதைகள்' என்ற கருப்பொருளின் கீழ் மாநாடு நடக்கும்.

இன்றைய டிஜிட்டல் உலகில் பெண் மக்கள் பிரதிநிதிகள் பாதுகாப்பை உறுதி செய்வது, முதல்முறையாக சட்டசபைக்கு தேர்வா கும் பெண் எம்.எல்.ஏ.,க்களுக்கு தேவையான வழிகாட்டுதல், ஆதரவு வழங்குவது பற்றி விவாதிப்பது மாநாட்டின் முக்கிய நோக்கம்.

ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவால் சந்திக்கும் சவால்கள், 'டீப்பேக்' தொழில்நுட்பம் குறித்தும் விவாதிக்கப்படும். அனுபவம் வாய்ந்தவர்களிடம் இருந்து, புதியவர்கள் கற்று கொள்ளும் வகையில் வழிகாட்டுதல்களை பெறுவதை, உறுதி செய்யும் வகையில் கருத்து பரி மாற்றம் நடக்கும்.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us