/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை வாங்கி பணமழை பெய்ய வைப்பதாக ஏமாற்றிய 10 பேர் கைது
/
புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை வாங்கி பணமழை பெய்ய வைப்பதாக ஏமாற்றிய 10 பேர் கைது
புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை வாங்கி பணமழை பெய்ய வைப்பதாக ஏமாற்றிய 10 பேர் கைது
புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை வாங்கி பணமழை பெய்ய வைப்பதாக ஏமாற்றிய 10 பேர் கைது
ADDED : நவ 05, 2025 12:50 AM

பெங்களூரு: பண மழை கொட்டும் என நம்ப வைத்து, பொது மக்களை ஏமாற்றி, அவர்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்கி, ஆர்.பி.ஐ., வங்கியில் டிபாசிட் செய்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரில் உள்ள ரிசர்வ் வங்கி மேலாளர், ஹலசூரு கேட் போலீசில், 2025 அக்., 17ல் புகார் ஒன்று அளித்தார். அதில், 2,000 ரூபாய் நோட்டில், 'சீரியல் எண்'கள் மாற்றப்பட்டு, எங்களிடம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த போலீசார், கப்பன்பேட்டையை சேர்ந்த நபரை, அக்., 24ல் கைது செய்து விசாரித்தனர். அப்போது அந்நபர், இதுவரை 40,000 ரூபாய் ஆர்.பி.ஐ.,யில் டிபாசிட் செய்துள்ளார். இதற்காக, இரண்டு பேரிடம், கமிஷன் பெற்றுள்ளார்.
குறிப்பிட்ட இரு நபர்களை, அக்., 25ம் தேதி, மைசூரு பேங்க் சதுக்கத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு மறைந்திருந்த போலீசார், அவர்களை பிடித்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இவர்கள் மூன்று பேரையும், ஆறு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களோ, மேலும் மூன்று பேரிடம் இருந்து, 8 லட்சம் ரூபாயில், 2,000 மதிப்பு ரூபாய் நோட்டுகளை பெற்று, ஆர்.பி.ஐ., வங்கியில் டிபாசிட் செய்வர். இதற்கான தொகையை பெற்று, 2,000 மதிப்பு ரூபாயை கொடுத்தவர்களின் வங்கி கணக்கில் செலுத்துவர்.
சிறப்பு பூஜை இந்த மூன்று பேரையும், பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்துக்கு தந்திரமாக வரவழைத்த போலீசார், அவர்களையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, ஒன்பது நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் போலி சாமியார் போன்று வேடம் அணிந்து, மக்களை அணுகுவர். அவர்களிடம், 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதற்கு சிறப்பு பூஜைகள் செய்தால், 'பணமழை பெய்யும்' என்று நம்ப வைத்துள்ளனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அக்., 28ம் தேதி ஆந்திராவில் மேலும் மூவரை போலீசார் கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இவர்களிடம் இருந்து, பொது மக்களை ஏமாற்றி பெற்ற, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,000 நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ரூபாய் நோட்டுகளில் சீரியல் எண்கள், வருடத்தை மாற்றி கொடுத்த யஷ்வந்த்பூரை சேர்ந்த நபரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள், பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மோகன், சீனிவாஸ் மூர்த்தி, ராஜு, பசவராஜ், முனிஷாமப்பா, மல்லிகார்ஜுன், ராமகிருஷ்ணா, முரளிதர், ராமசந்திரா, முபராக் ஆகிய பத்து பேரிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் மதிப்பு நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு பெண் தலைமறைவாக உள்ளார். அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டில், 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது. இதுவும், நிறுத்தப்பட்டு, பொது மக்களிடம் இருக்கும், 2,000 ரூபாய் நோட்டுகளை, 2023, அக்., 7க்குள் ஆர்.பி.ஐ., எனும் இந்திய ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆர்.பி.ஐ., வங்கி அதேநேரம், 2023 அக்., 7க்கு பின், 2,000 ரூபாய் நோட்டுகளை செலுத்த விரும்பினால், குறிப்பிட்ட 19 ஆர்.பி.ஐ., வங்கியில் நேரடியாக சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. 2025 ஏப்ரல் வரை, 6,366 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ஆர்.பி.ஐ.,யிடம் வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

