/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிபாசிட் இயந்திரத்தில் கள்ள நோட்டு போட்ட 10 பேர் கைது
/
டிபாசிட் இயந்திரத்தில் கள்ள நோட்டு போட்ட 10 பேர் கைது
டிபாசிட் இயந்திரத்தில் கள்ள நோட்டு போட்ட 10 பேர் கைது
டிபாசிட் இயந்திரத்தில் கள்ள நோட்டு போட்ட 10 பேர் கைது
ADDED : ஜூன் 29, 2025 11:05 PM
ராய்ச்சூர்: பணம் டிபாசிட் இயந்திரத்தில், கள்ள நோட்டுகள் போட்டு மோசடி செய்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வி நகரில் ரூபாய் நோட்டுகள் டிபாசிட் செய்யும் ஏ.டி.எம்., இயந்திரம் உள்ளது. ராய்ச்சூரை சேர்ந்த சேகர், தன் சகோதரர் விருபாக்ஷாவின் வங்கி கணக்கில் பணம் போட, இரண்டு நாட்களுக்கு முன், அங்கு வந்தார். 2,500 ரூபாய் உண்மையான நோட்டுகளுடன், கள்ள நோட்டுகளை சேர்த்து 20,500 ரூபாய் போட்டார்.
இதில் உண்மையான நோட்டுகளை மட்டுமே இயந்திரம் ஏற்றது. 18,000 ரூபாய் கள்ள நோட்டுகள், உள்ளே சிக்கிக்கொண்டது. உள்ளேயும் செல்லவில்லை வெளியே எடுக்கவும் முடியவில்லை.
விருபாக்ஷா, தான் கணக்கு வைத்துள்ள, தனியார் வங்கிக்கு சென்று, தன் கணக்குக்கு பணம் வரவில்லை என, புகார் அளித்தார். இவரது புகாரின்படி, வங்கி ஊழியர்கள், டிபாசிட் இயந்திரத்தை ஆய்வு செய்த போது, கள்ள நோட்டுகள் சிக்கி இருப்பது தெரிந்தது. உடனடியாக மான்வி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணை நடத்திய போலீசார், சேகர் கள்ள நோட்டுகளை போட்டதை கண்டுபிடித்தனர். சேகர், விருபாக்ஷா, காஜா ஹுசேன் உட்பட, 10 பேரை கைது நேற்று கைது செய்தனர். அவர்களிடம் ஒரு கார், நான்கு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.