தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரியல் எஸ்டேட் ஏஜன்ட் கொலையில் 10 பேர் கைது சி.ஐ.டி., விசாரணைக்கு பரமேஸ்வர் உத்தரவு

 ரியல் எஸ்டேட் ஏஜன்ட் கொலையில் 10 பேர் கைது சி.ஐ.டி., விசாரணைக்கு பரமேஸ்வர் உத்தரவு

 ரியல் எஸ்டேட் ஏஜன்ட் கொலையில் 10 பேர் கைது சி.ஐ.டி., விசாரணைக்கு பரமேஸ்வர் உத்தரவு


ADDED : மார் 11, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்ஜாபூர்: ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், கூலிப்படையினர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாள் காவலில் போலீசார் எடுத்து உள்ளனர். இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரிக்கும் என்று, சட்டசபையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அறிவித்தார்.

சிக்கபல்லாபூரின் ஹொன்னகலசாபூர் கிராமத்தில் வசித்தவர் கோபால், 35. ரியல் எஸ்டேட் ஏஜன்ட். கடந்த 8ம் தேதி இரவு தனது காரில் பெங்களூரு ரூரல் கர்பூர் கிராம பகுதியில் சென்றார்.

இன்னொரு காரில் வந்த மர்ம கும்பல், கோபால் சென்ற கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், அவர் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்தி சென்றனர். தமிழகத்தின் தேன்கனிக்கோட்டையில், கோபாலின் உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது.

தொழில் போட்டி ஆனேக்கல் போலீசார் நடத்திய விசாரணையில், தொழில் போட்டியில் கோபாலை, அவரது நண்பர் மோகன்பாபு, 40, கூலிப்படை ஏவி கொன்றது தெரிந்தது. அவர் கைதான நிலையில், கூலிப்படையை சேர்ந்த 9 பேர், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருப்பது தெரிந்தது.

நேற்று காலை தர்மபுரி போலீசார் உதவியுடன், ஆனேக்கல் போலீசார் ஒகேனக்கல் சென்று 9 பேரையும் கைது செய்ய முயன்றனர்.

ஒரு காரில் 9 பேரும் தப்பி சென்றனர். போச்சம்பள்ளி - திருப்பத்துார் சாலையில், பாலதோட்டம் பிரிவில் வாகன சோதனை செய்து , கூலிப்படையினர் வந்த காரை, போலீசார் நிறுத்தினர். பெங்களூரை சேர்ந்த நரேஷ், 23, நிகில், 21, பிரசாந்த், 25, தர்ஷன், 27, நிகித், 23, திஜாய்ஸ், 28, மற்றொரு நிகித், 19, நிகில், 19, மற்றும் டிரைவர் ரகு, 25, ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

மோகன்பாபு உள்ளிட்ட கைதான 10 பேரும் ஆனேக்கல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பத்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் கோபால் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சட்டசபையில் நேற்று சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கோரிக்கையை ஏற்று, கோபால் கொலை வழக்கை சி.ஐ.டி., விசாரிக்கும் என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அறிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us