ADDED : மே 27, 2026 06:35 AM

அ நிறம் | அளவு
உத்தரகன்னடா: உத்தரகன்னடா மாவட்டம், தண்டேலி தாலுகா, பொம்மனஹள்ளி அணையில், 10 வயதுள்ள ஆண் யானை இறந்து கிடந்தது.
உத்தரகன்னடா மாவட்டம் தண்டேலி தாலுகாவில் உள்ள பொம்மனஹள்ளி அணையின் நீர்தேக்க பகுதியில், யானை ஒன்று இறந்து கிடப்பதாக, உள்ளூர் மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அணையில் இருந்து, 10 வயது ஆண் யானையின் சடலம் மீட்கப்பட்டது. அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன் உறுப்புகள், ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வு முடிவுகள் கிடைத்த பிறகே, மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
