sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தொட்டபல்லாபூரில் 100 பன்றிகள் கடத்தல்

தொட்டபல்லாபூரில் 100 பன்றிகள் கடத்தல்

தொட்டபல்லாபூரில் 100 பன்றிகள் கடத்தல்


ADDED : மார் 27, 2025 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 05:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொட்டபல்லாபூர்: யுகாதி அன்று இறைச்சிக்கு டிமாண்ட் இருப்பதை உணர்ந்த கும்பல், தொட்டபல்லாபூரில் 100 பன்றிகளை சரக்கு வாகனங்களில் கடத்திச் சென்றனர்.

சில பண்டிகைகளுக்கு இறைச்சிகள் விற்பனை அதிகமாக இருக்கும். இதற்காகவே கோழி, ஆடுகள், பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூரில் கடந்த ஒரு வாரத்தில், மூன்று வெவ்வேறு சம்பவங்களில், 100 பன்றிகள், அதன் கொட்டகையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு உள்ளன.

தேவனஹள்ளியின் பன்னிமங்களாவில், இம்மாதம் 21ம் தேதி, லோகேஷ் என்பவருக்கு சொந்தமான கொட்டகையில் இருந்து, 49 பன்றிகளை, ஆறு மர்ம நபர்கள் டாடா ஏஸ் வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.

 மார்ச் 23ல் பைரசந்திரா கிராமத்தில், திவாகருக்கு சொந்தமான 32 பன்றிகள் கடத்திச் செல்லப்பட்டன.

தொடர்ந்து பன்றிகள் கடத்தப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்கள், தொட்டபல்லாபூர் ரூரல் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு பின், மீண்டும் திவாகரின் கொட்டகையில் இருந்து, மேலும் 17 பன்றிகளை கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து திவாகர் கூறியதாவது:

இம்மாதம் 22ம் தேதி அதிகாலை 12:30 மணியளவில் கொட்கையில் இருந்து 32 பன்றிகளை கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தேன்.

பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, டாடா ஏஸ் வாகனத்தில் ஆறு பேர் வந்தனர்.

அவர்களில் ஒருவர், கேமரா முன் நின்று நடனமாடியபடி, 'மீண்டும் வருவோம்' என்று கூறிவிட்டுச் சென்றார்.

எனவே, அன்று முதல் கொட்டகை அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், கொசு தொல்லை அதிகமாக இருந்ததால், வீட்டுக்குள் சென்றுவிட்டேன். அன்றைய தினம் மீண்டும் வந்தவர்கள், பன்றிகளை கடத்திச் சென்றனர்.

அதிகாலை 3:00 மணி அளவில் பன்றிகளின் சத்தம் கேட்டு, என் சகோதரர், என்னை எழுப்பினார். நாங்கள் கொட்டகை அருகில் சென்றபோது, அங்கிருந்த பொலிரோ வாகனத்தில் பன்றிகளை ஏற்றிச் சென்றனர்.

அவர்களை விரட்டினோம். அதற்குள் அவர்கள் தப்பிவிட்டனர். வீட்டில் இருந்து 3 கி.மீ., தொலைவில், 30 - 40 கிலோ எடையுள்ள 9 பன்றிகளை சாலையில் விட்டு, விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

வாகனத்தில் எடை அதிகமாக இருந்ததால், இந்த பன்றிகளை விட்டுச் சென்றுள்ளனர். இதனால் எங்களுக்கு 12 முதல் 13 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us