தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/1,000 அரசு பள்ளிகளை தனியாராக்க முடிவு

1,000 அரசு பள்ளிகளை தனியாராக்க முடிவு

1,000 அரசு பள்ளிகளை தனியாராக்க முடிவு


UPDATED : நவ 05, 2026 12:00 AM

ADDED : நவ 04, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:00 AM ADDED : நவ 04, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘‘கர்நாடகாவில் அரசு பள்ளிகளை மேம்படுத்த, 1,000 அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது,’’ என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு விதான் சவுதா மாநாட்டு அரங்கில் நேற்று, ‘எங்கள் பள்ளி எங்கள் பொறுப்பு’ நிகழ்ச்சியில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

எங்கள் அரசு புதிய சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவன சமூ க பொறுப்பு கொள்கையை செயல்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி நிர்வாக வாரியங்களும், கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் அல்லது அவற்றின் வளர்ச்சியில் அரசுடன் கைகோர்க்க வேண்டும்.

கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களை, தனியார் பள்ளி மாணவர்களுடன் இணைத்து, தரமான கல்வி கற்பதால், அவர்களின் வாழ்வில் முன்னேற உதவும். இந்த வழியில் மொத்தம் 2,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுடன் இணைக்க திட்டமிட்டு உள்ளது.

முதலில், 6,000 பஞ்சாயத்துகளை மூன்றாக பிரித்து, 1,000 அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளுடன் இணைக்க திட்டமிட்டு உள்ளோம். எங்களின் இந்த முயற்சி, அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் பலனை தரும்.

எந்த அரசு பள்ளி வேண்டும் என்பதை தனியார் பள்ளிகளே தீர்மானித்து கொள்ளலாம். உங்கள் நிதி நிலையின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். உங்களால் 5 முதல், 10 கோடி ரூபாய் கொடுத்து கட்டடங்களை கட்ட முடியாவிட்டாலும், பரவாயில்லை.

உங்களின் திறமையான ஆசிரியர்களை, அரசு பள்ளிக்கு அனுப்புங்கள். தனியார் பள்ளி பஸ்களை விற்காதீர்கள். அதனை அரசு பள்ளிக்கு கொடுங்கள். ஆய்வக உபகரணங்கள், கணினிகளை கொடுத்தால், அது பயனுள்ளதாக இருக்கும்.

பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்தி, 30 பள்ளிகளை மேம்படுத்தும் பணி துவங்கி உள்ளன. அவற்றில், 10 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us