சித்தராமையா, சிவகுமார் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்
சித்தராமையா, சிவகுமார் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்
UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 11:14 PM
பெங்களூரு: கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ., அரசுக்கு எதிராக ஆதாரமற்ற விளம்பரங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, அப்போதைய மாநில தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் சிவகுமார் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதுாறு வழக்குகளை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவகுமார், சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணை நடந்து வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவர், நேற்று அளித்த தீர்ப்பில், ‘விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என்றார்.
இதே குற்றச்சாட்டு தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு எதிரான வழக்கை, 2026 பிப்ரவரியில் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
