தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வாய்க்கு வந்தபடி பேசினால் சிறை தான்! பா.ஜ.,வினருக்கு அமைச்சர் எச்சரிக்கை

வாய்க்கு வந்தபடி பேசினால் சிறை தான்! பா.ஜ.,வினருக்கு அமைச்சர் எச்சரிக்கை

வாய்க்கு வந்தபடி பேசினால் சிறை தான்! பா.ஜ.,வினருக்கு அமைச்சர் எச்சரிக்கை


UPDATED : நவ 05, 2026 12:13 AM

ADDED : நவ 04, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:13 AM ADDED : நவ 04, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''வாய்க்கு வந்தபடி பேசினால் சிறையில் தள்ளுவோம்,'' என, பா.ஜ., தலைவர்களுக்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமியின் மூளைக்கும், வாய்க்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் பிரதிநிதியான அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

கலபுரகிக்கு வந்து என்னை பார்த்து, நாய் என்று கூறினார். ஊடகத்தினர் கேள்வி எழுப்பிய போது, 'நாய் என்றால் நாராயணா; எனது பெயர் நாராயணசாமி' என்று விளக்கம் கொடுத்தார். இத்தகைய நபர்களுடன் எப்படி அரசியல் சண்டை செய்வது?

காங்கிரஸ் தலைவர்களை துண்டு, துண்டாக வெட்டி கடலில் வீசுவோம் என்று கூறிவிட் டு, காங்கிரஸ் கட்சியை சொன்னேன் என்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சியில் நாங்கள் தானே உள்ளோம்... எங்களை தான் அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள் எனது பிள்ளைகள் என்று, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகிறார். பொறுப்பான பதவியில் இருப்பதை, பா.ஜ., தலைவர்கள் மறக்கக் கூடாது. வாய்க்கு வந்தபடி பேசினால் அவர்களை சிறையில் தள்ளுவோம். இது அரசியல் விரோதம் இல்லை. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

மத்திய அமைச்சர் குமாரசாமி, என்னை ஒருமையில் திட்டினார். உள்துறை அமைச்சர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என்று கூறுகிறார்.

எனக்கு அவரது சான்றிதழ் தேவை இல்லை. சித்தராமையா தொடர்பான வீடியோ வழக்கில், அனைத்து உண்மைகளும் விரைவில் வெளிவரும்.

தினமும் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்துப் பேச வேண்டும் என்று, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து குறுந்தகவல் வருகிறது. இதனால் வாய்க்கு வந்ததை பேசுகின்றனர்.

காங்கிரசுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். எங்கிருந்து பணம் வருகிறது என்பதை, பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெளிப்படையாக கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us