தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 1,000 ஆண்டுகள் பழமையான மஹாபலேஸ்வரா கோவில்

 1,000 ஆண்டுகள் பழமையான மஹாபலேஸ்வரா கோவில்

 1,000 ஆண்டுகள் பழமையான மஹாபலேஸ்வரா கோவில்


ADDED : மார் 03, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: மைசூரு என்றால் பெரும்பாலானவர்களுக்கு அரண்மனையும், சாமுண்டி மலையும் தான் நினைவுக்கு வரும். ஆனால், சாமுண்டி மலை என்ற பெயர் வருவதற்கு முன்னரே, அந்த மலை மஹாபாலாத்ரி அல்லது மஹாபலா மலை என்று அழைக்கப்பட்டது பலருக்கு தெரியாது.

ஆம்... தற்போது சாமுண்டீஸ்வரி கோவில் அமைவதற்கு முன், தற்போது தெற்கு திசையில் உள்ள, 1,000 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை, மஹாபலேஸ்வரா என்றும், உத்பவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். துர்கா சக்தி பீடமாகவும் உள்ள இந்த ஸ்தலம், 108 சக்தி பீடங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

கங்கை மன்னர்கள் காலத்தில் கோவில் கட்டப்பட்டது. அதன்பின் வந்த ஹொய்சாலா மன்னர்களில் பிரபலமான மன்னரான விஷ்ணுவர்த்தனா, இக்கோவிலை விரிவாக்கம் செய்தார். அவரது காலத்தில் கோவிலுக்குள் அர்த்த மண்டபம், நவக்கிரஹம் அமைக்கப்பட்டது.

இக்கோவில் கட்டட வடிவமைப்பு கங்கை மன்னர்கள், ஹொய்சாலா மன்னர்கள், சோழர் மன்னர்கள் ஆட்சி காலத்தை பிரதிபலிக்கிறது. அர்த்த மண்டபமும், நவக்கிரஹமும் அமைந்து உள்ள பகுதி, ஹொய்சாலா கட்டட கலையை பிரதிபலிக்கிறது. சிவன் முகத்துடன் கூடிய லிங்கமாக, மஹாபலேஸ்வரா அருள்பாலிக்கிறார்.

சிவலிங்கத்தின் வலதுபுறத்தில் தாய் பார்வதி அமைந்து உள்ளார். சிவனுக்கு எதிரே நந்தி அமர்ந்துள்ளார். கருவறை வெளியே சுவற்றில் சுற்றிலும் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவா, மகிசாசுரமர்த்தினி விக்ரஹரங்கள் அமைந்து உள்ளன.

சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் உள்ளார். கோவில் வளாகத்தில் சப்த கன்னியர்கள், விஷ்ணு, விநாயகர், பார்வதி, சிவகாமியுடன் நடராஜர், பல்வேறு லிங்கங்கள், பைரவர், இந்திரர், பிரம்மா விக்ரஹங்களும் இடம் பெற்றுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us