தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'விபி ஜி ராம் ஜி' திட்டத்திற்கு எதிராக  108 கி.மீ., துார பாதயாத்திரை

 'விபி ஜி ராம் ஜி' திட்டத்திற்கு எதிராக  108 கி.மீ., துார பாதயாத்திரை

 'விபி ஜி ராம் ஜி' திட்டத்திற்கு எதிராக  108 கி.மீ., துார பாதயாத்திரை


ADDED : பிப் 11, 2026 09:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 09:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: 'விபி ஜி ராம் ஜி' திட்டத்திற்கு எதிராக, தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரசார், 108 கி.மீ., துார பாதயாத்திரையை துவக்கி உள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக, 'விபி ஜி ராம் ஜி' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரஸ் சார்பில், 'விபி ஜி ராம் ஜி' திட்டத்திற்கு எதிராக, சுள்ளியாவில் இருந்து முல்கி வரை 108 கி.மீ., துார, பாதயாத்திரை நேற்று துவக்கப்பட்டது.

பைச்சார், ஜல்சூர், கனகமஜலு, கும்பாரா, புத்துார், கபகா, மாணி வழியாக செல்லும் பாதயாத்திரை, நாளை முல்கியில் நிறைவு பெறுகிறது.

பாதயாத்திரை குறித்து, முன்னாள் எம்.பி., ஜெயபிரகாஷ் ஹெக்டே கூறுகையில், ''விபி ஜி ராம் ஜி சட்டம் மூலம் கிராமப்புற தொழிலாளர்கள் வாழ்க்கையை சீர்குலைக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்தச் சட்டத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து, மக்களிடம் எடுத்து சொல்லவே பாதயாத்திரையை துவக்கி உள்ளோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us