/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹரியானாவுக்கு கடத்த முயன்ற 1,093 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்
/
ஹரியானாவுக்கு கடத்த முயன்ற 1,093 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்
ஹரியானாவுக்கு கடத்த முயன்ற 1,093 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்
ஹரியானாவுக்கு கடத்த முயன்ற 1,093 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்
ADDED : செப் 04, 2025 11:12 PM

ஹொஸ்கோட்: பெங்களூரில் இருந்து ஹரியானாவுக்கு கூரியர் மூலம் கடத்த முயன்ற 1,093 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் அருகே கொளத்துார் கிராமத்தில் கூரியர் நிறுவனம் உள்ளது.
இங்கிருந்து ஹரியானா மாநிலத்திற்கு அனுப்ப வேண்டிய பார்சல்களில், செம்மரக்கட்டைகள் இருப்பதாக ஹொஸ்கோட் டி.எஸ்.பி., மல்லேஷுக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு மல்லேஷ் தலைமையில், ஹொஸ்கோட் இன்ஸ்பெக்டர் கோவிந்த், போலீசார் கூரியர் நிறுவனத்திற்கு சென்றனர். அங்கு இருந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர்.
ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1,093 கிலோ இருந்தது.
இதன்மதிப்பு 25 லட்சம் ரூபாய். செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பார்சலை கொண்டு வந்தவர்கள் யார் என்று விசாரித்தபோது, ஹொஸ்கோட்டின் அஜாஸ் ஷெரீப், 47, பயாஸ் ஷெரீப், 47, சாதிக் கான், 34, என்பது தெரிந்தது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஹரியானாவை சேர்ந்த விஷ்ணுகுமார் என்பவருக்கு செம்மரக்கட்டைகளை மூன்று பேரும் அனுப்பியதும்; மூன்று பேர் மீது ஆந்திராவில் உள்ள பல போலீஸ் நிலையங்களில், செம்மரக்கட்டைகளை கடத்திய வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பும் கூரியர் வழியாக செம்மரக்கட்டைகள் அனுப்பினரா என்றும் விசாரணை நடக்கிறது.