/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
10ம் வகுப்பு மார்ச் 18; பி.யு.சி., ஏப்., 25 பொது தேர்வுகள் அட்டவணை வெளியீடு

ADDED : நவ 06, 2025 12:02 AM
பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வும்; ஏப்ரல் 25ம் தேதி பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வும் துவங்குகிறது.
கர்நாடகாவில், 2025 - 2026ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கிறது. பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 25 முதல் மே 9ம் தேதி வரை நடக்கின்றன.
எஸ்.எஸ்.எல்.சி., ஜூனியர் தொழில்நுட்ப பாடப்பிரிவு மாணவர்களுக்கு, 56, 57, 58, 59 பாடப்பிரிவுக்கான தேர்வுகள், ஏப்ரல் 4ம் தேதி அவர்களின் பள்ளிகளிலேயே நடக்கும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.