தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 10ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை: 7 சிறுவர்கள் கைது

 10ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை: 7 சிறுவர்கள் கைது

 10ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை: 7 சிறுவர்கள் கைது


ADDED : பிப் 25, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: பள்ளிக்கு வெளியே சிறுவர்கள் இடையே நடந்த சண்டையை விலக்க சென்ற போது, தாக்குதலுக்குள்ளான 10ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். ஏழு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஷிவமொக்கா மாவட்டம், உரகடூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர் சங்கேத், 16. தற்போது, 10ம் வகுப்புக்கான சிறப்பு வகுப்பு, பள்ளியில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு வகுப்பு முடித்து வெளியே வந்த போது, அதே பள்ளியை சேர்ந்த கிரிஷ் என்ற மாணவரை, சில சிறுவர்கள் அடித்து கொண்டிருந்தனர்.

குற்றச்சாட்டு இதை தடுக்க சென்ற சங்கேத்தை, அம்மாணவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த அவர், மயங்கி விழுந்தார். இதை பார்த்த அப்பகுதியினர், சங்கேத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து துங்காநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்களிடம் அப்பகுதியினர், 'இங்கு இரவு நேரத்தில் கஞ்சா புகைப்பவர்கள் அதிகரித்து உள்ளனர்.

இங்கு துணை போலீஸ் நிலையம் அமைக்க பலமுறை கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று குற்றம்சாட்டினர்.

மாவட்ட எஸ்.பி., நிகில் நேற்று அளித்த பேட்டி:

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த கிரிக்கெட் போட்டி தொடர்பாக, இக்கொலை நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கஞ்சா பிரச்னை குறித்து விசாரிக்கப்படும். இங்கு துணை போலீஸ் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கைதானவர்களை கஞ்சா சோதனைக்கு உட்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.15 லட்சம் கைதானவர்கள் அனைவரும் சிறுவர்கள். கொலை செய்யப்பட்ட சங்கேத் குடும்பத்தினருக்கு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாயும்; கல்வி துறையில் இருந்து 5 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும், என மாவட்ட கலெக்டர் பிரபுலிங்கா தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா, 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:

பள்ளி மாணவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மாணவரின் குடும்பத்திற்கு உதவுவதோடு, இந்த செயலில் ஈடுபட்ட ஒவ்வொரு குற்றவாளியும் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதை உறுதி செய்யவும், அவரது மரணத்துக்கு நீதி வழங்க உண்மையான முயற்சியை மேற்கொள்வோம்.

கொலை செய்தவர்கள் சிறுவர்கள் என்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நன்றாக படித்து, எதிர்காலத்தை உருவாக்கி, தங்கள் குடும்பத்தை ஆதரிக்க வேண்டிய மாணவர்கள், தீய செயல்களுக்கு இரையாகி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது.

இக்கொடூர செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us