/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலி முதல்வரிடம் விசாரணை அறிக்கை
/
ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலி முதல்வரிடம் விசாரணை அறிக்கை
ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலி முதல்வரிடம் விசாரணை அறிக்கை
ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலி முதல்வரிடம் விசாரணை அறிக்கை
ADDED : ஜூலை 12, 2025 05:26 AM

பெங்களூரு : ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலியான சம்பவத்தில், முதல்வர் சித்தராமையாவிடம், நீதி விசாரணை அறிக்கையை ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா சமர்ப்பித்துள்ளார்.
ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில், கடந்த மாதம் 4ம் தேதி சின்னசாமி மைதானத்தில் அணிக்கு பாராட்டு விழா நடந்தது. மைதானம் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ஆர்.சி.பி., ரசிகர்கள் இறந்தனர்.
இதுகுறித்து ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கு கடந்த மாதம் 7ம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை விதான் சவுதாவில் சித்தராமையாவை சந்தித்த, ஜான் மைக்கேல் குன்ஹா தன் அறிக்கையை சமர்ப்பித்தார்.
பின், சித்தராமையா கூறுகையில், ''சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தது தொடர்பான, விசாரணை அறிக்கையை, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா சமர்ப்பித்துள்ளார்.
''அந்த அறிக்கையில் சில அம்சங்களை படித்துள்ளேன். இன்னும் முழுமையாக படிக்கவில்லை. அறிக்கையை அமைச்சரவை முன்வைத்து விவாதித்து முடிவு எடுப்போம்,'' என்றார்.