/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குரங்கு காய்ச்சலுக்கு 11 வயது சிறுவன் பலி
/
குரங்கு காய்ச்சலுக்கு 11 வயது சிறுவன் பலி
ADDED : ஜூலை 28, 2025 05:09 AM
உத்தரகன்னடா : குரங்கு காய்ச்சலுக்கு 11 வயது சிறுவன் பலியானதால், உத்தரகன்னடா மாவட்டத்தில் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
உத்தரகன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகாவின் அவர்சா கிராமத்தில் வசித்தவர் ஆரவ், 11. இவர் நடப்பாண்டு ஏப்ரலில், கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
மணிப்பால் மருத்துவமனைக்கு பின், பெங்களூரின் நிமான்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து இந்திராகாந்தி குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறுவனுக்கு செயற்கை பிராணவாயு வசதி கொண்ட ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.
அதன்பின் ஜனசக்தி வேதிகே அமைப்பின் தலைவர் மாதவ நாயக், ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் சிறுவன் உயிரிழந்தார்.
உத்தரகன்னடாவில் குரங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை, மூன்றாக அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்சா கிராமத்தில் குரங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்துகின்றனர்.