ADDED : மார் 29, 2026 03:46 AM

அ நிறம் | அளவு
ெஹாஸ்கோட்: பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் கலால் துறையினரால் கைப்பற்றப்பட்ட 111.355 கிலோ கஞ்சா, ெஹாஸ்கோட் தாலுகாவில் உள்ள கர்நாடக தொழிற்சாலை பகுதி மேம்பாட்டு வாரியத்தின் தொழிற்பேட்டையில் அழிக்கப்பட்டது.
கிராமப்புறப் பிரிவு கலால் இணை ஆணையர் சி.எச்.பாலகிருஷ்ணா, சிக்கபல்லாப்பூர் கலால் துணை ஆணையர் எம்.ரவீந்திரா, பெங்களூரு தென் மாவட்ட கலால் துணை ஆணையர் ஜி.பி.நரேந்திர குமார், துமகூரு மாவட்ட கலால் துணை ஆணையர் எஸ். பசவராஜ் பாரதேஷ் மற்றும் அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டனர்.
