துமகூரு சித்தகங்கா மடத்தில் 119 குழந்தைகளுக்கு பெயர்
துமகூரு சித்தகங்கா மடத்தில் 119 குழந்தைகளுக்கு பெயர்
ADDED : ஏப் 06, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
துமகூரு: சித்தகங்கா மடத்தில் 119 குழந்தைகளுக்கு நேற்று பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடந்து உள்ளது.
துமகூரு டவுனில் சித்தகங்கா மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த சிவகுமார சுவாமி தனது 111 வயதில் கடந்த 2019ம் ஆண்டு மரணம் அடைந்தார். கடந்த 1ம் தேதி அவரது 119வது பிறந்தநாள் ஆகும். மடத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
இந்நிலையில் சிவகுமார சுவாமி 119வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 119 குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி, மடத்தின் வளாகத்தில் நேற்று நடந்தது.
இளைய மடாதிபதி சிவசித்தேஸ்வர சுவாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஆண் குழந்தைகளுக்கு 'சிவகுமார்' என்றும், பெண் குழந்தைகளுக்கு 'சிவானி' என்றும் பெயர் சூட்டப்பட்டது.
