/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
1,195 பேர் மீது வழக்கு ரூ.10 லட்சம் அபராதம்
/
1,195 பேர் மீது வழக்கு ரூ.10 லட்சம் அபராதம்
ADDED : ஜூலை 03, 2025 05:12 AM
பெங்களூரு:போக்குவரத்து விதிகளை மீறிய 1,995 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பத்து லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மேற்குப்பிரிவு போக்குவரத்து டி.சி.பி., அனிதா ஹட்டன்னவர் நேற்று அளித்த பேட்டி:
விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி வந்த 177 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 85 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறிய 1,135 பேர் மீது வழக்கு, 5.68 லட்சம் ரூபாய் அபராதம்; தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திய 363 பேர் மீது வழக்கு, 2.23 லட்சம் ரூபாய் அபராதம்; ஒரு வழிப்பாதையில் வாகனம் ஓட்டிய 39 பேர் மீது வழக்கு, 19 ஆயிரம் ரூபாய் அபராதம்; விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுநர்கள் 213 பேர் மீது வழக்கு, 69 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1,995 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.