/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழர் மாலதி பிரியா உட்பட 12 வன அதிகாரிகள் இடமாறுதல்
/
தமிழர் மாலதி பிரியா உட்பட 12 வன அதிகாரிகள் இடமாறுதல்
தமிழர் மாலதி பிரியா உட்பட 12 வன அதிகாரிகள் இடமாறுதல்
தமிழர் மாலதி பிரியா உட்பட 12 வன அதிகாரிகள் இடமாறுதல்
ADDED : ஜூலை 31, 2025 05:59 AM

பெங்களூரு : தமிழ் ஐ.எப்.எஸ்., மாலதி பிரியா உட்பட 12 வன அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா வனத்துறையில் பணியாற்றும் ஐ.எப்.எஸ்., - எஸ்.எப்.எஸ்., அதிகாரிகள் 12 பேருக்கு அதிரடியாக இடமாறுதல் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
பெங்களூரு வன நிலப்பதிவு துறை, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மனோஜ்குமார் திரிபாதி, பெங்களூரு வனவிலங்குகள் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாம்ராஜ்நகர் மண்டல தலைமை வன பாதுகாவலர் ஹீராலால், ஷிவமொக்கா மண்டல தலைமை வன பாதுகாவலராக மாற்றப்பட்டுள்ளார்.
ஷிவமொக்கா மண்டல தலைமை வன பாதுகாவலர் ஹனுமந்தப்பா, சாம்ராஜ்நகர் மண்டல தலைமை வன பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைசூரு மண்டல தலைமை வன பாதுகாவலர் மாலதி பிரியா, மைசூரு வன பாதுகாப்பு பிரிவு தலைமை வன பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைசூரு வன பாதுகாப்பு பிரிவு தலைமை வன பாதுகாவலர் ரவிசங்கர், மைசூரு மண்டல தலைமை வன பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்ராவதி மண்டல துணை வன பாதுகாவலர் நிர்மலா, கொப்பால் மண்டல துணை வன பாதுகாவலராக இனி பணி செய்வார்.
விஜயபுரா மண்டல துணை வன பாதுகாவலர் சிவசரணய்யா, தார்வாட் மண்டல வனத்துறையின் ஆராய்ச்சி பிரிவு துணை வன பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த மல்லிநாத் குசனாலா, விஜயபுரா மண்டல துணை வன பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பீதர் மண்டலத்தில் சமூக வன பிரிவில் துணை வன பாதுகாவலராக பணி செய்த அன்னராயா பாட்டீல், யாத்கிர் மண்டல துணை வன பாதுகாவலராக இனி பணியாற்றுவார்.
வன நில பதிவு துறையில் துணை வன பாதுகாவலர் ஹர்ஷவர்தன், தாவணகெரே மண்ட வன பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடகு, மடிகேரியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் மையத்தில் துணை வன பாதுகாவலராக பணியாற்றிய பரமேஷ், மைசூரு மண்டல துணை வன பாதுகாவலராக பணியாற்றுவார்.
சிக்கமகளூரில் வனம், தொழில்நுட்ப பிரிவில் துணை வன பாதுகாவலராக பணி செய்த ரவீந்திர குமார், பத்ராவதி மண்டல துணை வன பாதுகாவலராக இனி பணி செய்வார்.
பட்டியலில் முதல் ஆறு அதிகாரிகள் ஐ.எப்.எஸ்., எனும் இந்திய வனப்பணி அதிகாரிகள், மற்ற ஆறு பேர் எஸ்.எப்.எஸ்., எனும் மாநில வன அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.