தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகளை விபசாரத்தில் தள்ளிய தந்தை உட்பட 12 பேர் கைது

 மகளை விபசாரத்தில் தள்ளிய தந்தை உட்பட 12 பேர் கைது

 மகளை விபசாரத்தில் தள்ளிய தந்தை உட்பட 12 பேர் கைது


ADDED : ஜன 08, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சொந்த மகளை பணத்தாசையால், பலவந்தமாக விபசாரத்தில் தள்ளிய தந்தை உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிக்கமகளூரு மாவட்டம், அஜ்ஜம்புரா தாலுகாவின், நாகமங்களா கிராமத்தில் வசிப்பவர் கிரிஷ், 40. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன், இவரது மனைவி உடல் நிலை பாதிப்பால் இறந்துவிட்டார். அதன்பின் இவரது மகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பினார். பி.யு.சி.,வரை படித்த 16 வயது மகள், தந்தையின் வீட்டுக்கு திரும்பினார்.

கிரிஷுக்கு, நாராயணசாமி என்பவர் மூலம் பரத் ஷெட்டி அறிமுகமானார். இவர் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதை தொழிலாக கொண்டவர். கிரிஷின் மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தினால், தினமும் 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என, ஆசை காட்டினார். இதற்கு கிரிஷும், அவரது தாயும் சம்மதித்தனர்.

கிரிஷ் மகளை அழைத்து கொண்டு, பரத் ஷெட்டியுடன் மங்களூரு வந்து, அவரது வீட்டில் தங்கினார். மறுநாள் பரத் ஷெட்டி சிறுமியிடம், 'நான்கைந்து ஆண்கள் வருவர். அவர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும்' என, கட்டாயப்படுத்தினார். சிறுமி மறுத்தும் கேட்கவில்லை. 20 வயது முதல் 45 வயது வரையிலான நால்வர், ஒருவர் பின் ஒருவராக, சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

மறுநாளும் இதே செயலுக்கு வலியுறுத்திய போது, சிறுமி மறுத்தார். ஆனால் மூன்று நபர்கள், 'நாங்கள் உன் தந்தைக்கும், பரத் ஷெட்டிக்கும் பணம் கொடுத்துள்ளோம்' என கூறி, சிறுமியை பலாத்காரம் செய்தனர். சில நாட்கள் அங்கு வைத்திருந்து, தந்தையின் ஒத்துழைப்புடன், சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

சொந்த கிராமத்துக்கு திரும்பிய பின், நடந்த சம்பவத்தை தன் சித்தப்பாவிடமும், அத்தையிடமும் சிறுமி கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், பீரூரு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இதன்படி சிறுமியின் தந்தை கிரிஷ், பாட்டி நாகரத்னா, நாராயணசாமி, பரத் ஷெட்டி உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us