ADDED : மே 09, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் நகர பகுதியான பெமல் நகர், பாலக்காடு லைன், தொட்டூர் கர்ப்பனஹள்ளி, கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் நடமாடும் மான்களை தெருநாய்கள் கடித்து கொல்வது வழக்கம்.
கிராம பகுதியான பேத்தமங்களா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட டி.கொள்ளஹள்ளி கிராமத்தின் விவசாயி நாராயணப்பா என்பவர், வழக்கம் போல தனக்கு சொந்தமான 12 ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மாலையில் ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வர, வனப்பகுதிக்கு சென்றிருந்தார். நாய்கள் கடித்து, ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கால்நடைத் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. நாராயணப்பாவுக்கு இழப்பீடு கேட்டு கிராமத்தினர் மனு கொடுத்தனர்.

