/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 12 வயது சிறுவன் பலி
/
விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 12 வயது சிறுவன் பலி
விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 12 வயது சிறுவன் பலி
விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 12 வயது சிறுவன் பலி
ADDED : ஆக 30, 2025 11:06 PM

தொட்டபல்லாபூர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, வாகனத்தின் இன்ஜின் மீது வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில், 12 வயது சிறுவன் உயிரிழந்தான்; ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி., பாபா நேற்று அளித்த பேட்டி:
விநாயகர் சதுர்த்தியையொட்டி, தொட்டபல்லாபூரின் மட்டூரில், நண்பர்கள் விநாயகர் சங்கத்தினர், நேற்று முன்தினம் நடந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். விநாயகரை 'போர்ட் லிப்ட்' என்ற இயந்திரம் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த இயந்திரத்தின் சைலென்சர் அருகில் பட்டாசுகள் அடங்கிய பையை வைத்துள்ளனர்.
சைலென்சரில் ஏற்பட்டிருந்த வெப்பத்தால், பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் ராக்கெட் பட்டாசு ஒன்று, தனுஷ் ராவ், 12, என்ற சிறுவனின் விலாப்பகுதியில் பலமாக தாக்கியதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவத்தில் போலீஸ் ஏட்டு உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், சிலர் அலட்சியமாக இருந்ததால், இச்சம்பவங்கள் நடக்கின்றன.
விழா ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் நாட்களில், பட்டாசுகளை குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்படும். இதை மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்சம்பவத்தை அடுத்து, விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு பெங்களூரு ரூரல் மாவட்ட கலெக்டர் பசவராஜ் தடை விதித்துள்ளார்.