தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாயை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுவன் கொலை

 தாயை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுவன் கொலை

 தாயை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுவன் கொலை


ADDED : ஏப் 30, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: சொத்து தகராறு காரணமாக, சித்தப்பாவால் தாக்கப்பட்ட தாயை காப்பாற்ற சென்ற மகன் கொலை செய்யப்பட்டார்.

ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுாரு தாலுகாவின், அலபனுாரு கிராமத்தில் வசிப்பவர் சித்தப்பா. இவரது தம்பி பசவராஜ். முன்னோர்கள் மூலமாக வந்த, 4 ஏக்கர் நிலம் விஷயத்தில், சகோதரர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக, அவ்வப்போது சண்டையும் நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை, சித்தப்பா வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு, தம்பி பசவராஜ் வந்தார்.

அங்கிருந்த அண்ணி அம்ருதாவை, கத்தியால் தாக்கினார். இதை கண்ட அவரது மகன் நாகராஜ், 12, தாயை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவரும் கத்திக்குத்துக்கு ஆளாகி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

அம்ருதாவும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவத்துக்கு பின், பசவராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர். சம்பவ இடத்தை போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us