தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு உயிரியல் பூங்காவில் 13 வயது ஆண் புலி மரணம்

 மைசூரு உயிரியல் பூங்காவில் 13 வயது ஆண் புலி மரணம்

 மைசூரு உயிரியல் பூங்காவில் 13 வயது ஆண் புலி மரணம்


ADDED : ஏப் 10, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு உயிரியல் பூங்கா செயல் இயக்குநர் அனுஷா கூறியதாவது:

பூங்காவில் இருந்த, பிறக்கும் போதே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட, 13 வயது ஆண் புலி பிருத்வியின் உடல், கடந்த 6ம் தேதி பாதிக்கப்பட்டது. உடனடியாக சாமுண்டி வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு இனப்பெருக்க மையத்துக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றோம்.

சிகிச்சை பெற்று வந்த புலி, சில நாட்களாக உணவு உட்கொள்வதையும் நிறுத்தியதால், உடல் நிலை மோசமானது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், பிரீத்தி என்ற மூன்று வயது பெண் புலியும், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us