/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜூஸ் பாட்டிலில் பூச்சி மருந்து குடித்த 14 வயது சிறுமி பலி
/
ஜூஸ் பாட்டிலில் பூச்சி மருந்து குடித்த 14 வயது சிறுமி பலி
ஜூஸ் பாட்டிலில் பூச்சி மருந்து குடித்த 14 வயது சிறுமி பலி
ஜூஸ் பாட்டிலில் பூச்சி மருந்து குடித்த 14 வயது சிறுமி பலி
ADDED : ஏப் 03, 2025 07:21 AM

பேட்ராயனபுரா : பாட்டிலில் அடைக்கப்பட்டு இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை, ஜூஸ் என்று நினைத்து குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரு பேட்ராயனபுரா பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணா. இவரது மகள் நிதி, 14. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, சில மாதங்களாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தார்.
அந்த ஜூஸை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்திருந்தார். கடந்த மாதம் 14ம் தேதி பாட்டிலில் இருந்த ஜூஸ் காலியானது.
இதனால் அந்த பாட்டிலுக்குள், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை கிருஷ்ணா ஊற்றி வைத்திருந்தார்.
இதுபற்றி தெரியாத நிதி, பாட்டிலில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை, ஜூஸ் என்று கருதி குடித்துவிட்டார். கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தார். அவரை பெற்றோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், தீவிர சிகிச்சைக்காக கிம்ஸ் அரசு மருத்துவமனையில் நிதி சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் நேற்று முன்தினம் இரவு இறந்தார். பேட்ராயனபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.

