ADDED : ஏப் 29, 2026 01:32 AM

அ நிறம் | அளவு
சித்ரதுர்கா: அரசு பஸ் கவிழ்ந்ததில், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பல்லாரியில் இருந்து, 44 பயணியருடன் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரே தாலுகா ஹெக்கரே கிராமம் அருகே நேற்று காலை சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறு மாறாக ஓடி, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த, 15க்கும் மேற்பட்ட பயணியர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சல்லகெரே போலீசார் விசாரிக்கின்றனர். பின்னர், கிரேன் மூலம் பஸ் அப்புறப்படுத்தப்பட்டது.
