தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கல்லுாரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 15 மாணவியர் மருத்துவமனையில் அனுமதி

 கல்லுாரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 15 மாணவியர் மருத்துவமனையில் அனுமதி

 கல்லுாரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 15 மாணவியர் மருத்துவமனையில் அனுமதி


ADDED : ஜூன் 12, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹாசன்: ஹாசனில் அரசு வேளாண் அறிவியல் கல்லுாரி விடுதியில், பல்லி விழுந்த சாம்பார் சாப்பிட்ட, 15க்கும் மேற்பட்ட மாணவியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹாசன் தாலுகா சாராபூரில் வேளாண் அறிவியல் கல்லுாரி விடுதி உள்ளது. இந்த விடுதியில் 400க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு மாணவியர் உணவு சாப்பிட்டனர். அவர்களில் ஆறு பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள், ஹாசன் ஹிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விடுதி சமையல் கூடத்தில் ஆய்வு செய்தபோது, சாம்பாரில் பல்லி இறந்து கிடந்தது தெரிந்தது.

நேரம் செல்லச் செல்ல 15க்கும் மேற்பட்ட மாணவியருக்கு மயக்கம் ஏற்பட்டதால், அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட சுகாதார அதிகாரி அனில் குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியரை பார்வையிட்டு, டாக்டர்களிடம் விபரம் கேட்டறிந்தனர்.

400 மாணவியர் தங்கி படிக்கும் விடுதியில், வாரத்திற்கு நான்கு முதல், ஆறு காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் ஏஜன்சியோ, ஒன்று அல்லது இரண்டு சிலிண்டர்களை மட்டும் வினியோகம் செய்கிறது.

இதனால் சமையல் அறை வெளியே, உணவு தயாரிக்க விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என மாணவியர் குற்றம்சாட்டினர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us